தமிழக அரசு வேலைவாய்ப்பு!! 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!!

Photo of author

By Gayathri

தமிழக அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் செய்தி மக்கள் தொடர்புத் துறையானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி சென்னை மாநகரில் இயங்கி கொண்டிருக்கும் ராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: ராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபம்

பணியின் பெயர்:

*நூலகர்
*காப்பாளர்

காலிப்பணியிடங்கள்:

நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு என்று மொத்தமாக 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.2,500/- முதல் ரூ.5,000/- வரை ஊதியம் வழங்கப்பட இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://chennai.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்வையிடவும்.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு உங்கள் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,இராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபம்,சர்தார் வல்லபாய் பட்டேல் ரோடு,கிண்டி,சென்னை-600 022.

நவம்பர் 15 ஆம் தேதிக்குள் இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.