வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தினை விரிவுபடுத்திய தமிழக அரசு!!

Photo of author

By Gayathri

வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தினை விரிவுபடுத்திய தமிழக அரசு!!

Gayathri

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருக்கக்கூடிய மலைக் கிராமங்களில் இல்லம் தேனி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது தற்பொழுது விரிவு படுத்தப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.

 

தமிழகத்தில் இருக்கக்கூடிய சாதாரண பகுதிகளில் மக்கள் நேரடியாக சென்ற ரேஷன் பொருட்களை வாங்கி வரக்கூடிய நிலையில் மலை கிராமங்களில் இருக்கக்கூடிய மக்கள் தங்களுடைய ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு பெரிதும் சிரமப்பட்டு வந்த நிலையில் மலை கிராமங்களில் இருக்கக்கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமானது தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது அந்த திட்டமானது பிரிவு படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்த வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

 

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மலைப்பகுதிகள் என்ற காரணத்தால் அங்கு இருக்கக்கூடிய கிராமங்களில் தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் நேரடியாக வழங்க முடிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பு காரணமாக முதன் முதலில் கொடைக்கானல் வட்டம், வெள்ளக்கவி மலை கிராமத்தில் இருக்கக்கூடியவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து தற்பொழுது வெள்ளக்கவி ஊராட்சிக்குட்பட்ட சின்னூர் மற்றும் பெரியூர் மலை கிராமங்களில் வசிக்கக்கூடிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் வீடு தேடி சென்று பொருட்களை வழங்குவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு 7 கிலோமீட்டர் தூரம் வரை மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும் என்றும் மக்கள் வட்டக்காணல் பகுதிக்கு வந்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொண்டு அதன் பின் தலையில் அந்த சுமையை சுமந்து கொண்டு மலை பாதையில் பயணிக்க வேண்டி உள்ளதால் 7 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை வழியாக குதிரைகள் மூலமாக ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு அங்கு வசிக்கக்கூடிய மலை கிராம மக்களுக்கு இல்லம் தேடி ரேஷன் என்ற வகையில் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருக்கக்கூடிய 30 குடும்ப அட்டைதாரர்கள் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பதால் ஒரே நாடு ஒரே கார்டு என்று திட்டத்தின் கீழ் அவர்கள் இருக்கக்கூடிய ஊர்களில் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.