ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது!

Photo of author

By Parthipan K

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது!

Parthipan K

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு, மக்களின் நலனுக்காக அந்த ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தற்போது வரை திறக்கப் படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழக அரசு மேற்கொண்ட  நடவடிக்கைக்கு எதிராக வேதாந்தா என்ற நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வேதாந்தா நிறுவனம் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ததால், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு சென்ற ஆகஸ்ட் 31ம் தேதி அன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அத்துடன் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உள்பட எதிர் மனுதாரர்கள் அனைவரும் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பதிலளித்த தமிழக அரசு, “ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது” என்று  பதிலளித்துள்ளது.