விவசாயிகளுக்கு குஷி.. கடனுதவி வழங்குவது குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!! 

0
225
Tamil Nadu government has released a new notification regarding the provision of loans to the farmers.
Tamil Nadu government has released a new notification regarding the provision of loans to the farmers.

விவசாயிகளுக்கு குஷி.. கடனுதவி வழங்குவது குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு கடனுதவி வழங்கி வருவதால் சர்க்கரை உற்பத்தியில் சரிவில் இருந்த தமிழகம் மீண்டும் முன்னேறி வருகிறது.

இந்நிலையில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை ரூ.94.49 கோடி கடனுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

தமிழக அரசின் அரசாணை

“கரும்பு விவசாயிகளின் நலனில் சிறப்புக் கவனம் செலுத்தும் நோக்குடனும்,சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கும் பொருட்டும் 2022 ஆம் ஆண்டு முதல் சர்க்கரைத் துறை வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரால் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

சர்க்கரை தேவை: இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியில் தமிழ்நாடு 4ஆவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து சர்க்கரை உற்பத்தியில் தொடர்சரிவு என்ற நிலை மாறி 2022-23ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 14.74 இலட்சம் மெ.டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்து மாநிலத்தின் சர்க்கரைத் தேவையான 15 இலட்சம் மெட்ரிக் டன் என்பதைப் பூர்த்தி செய்யும் நிலைக்கு முன்னேறி உள்ளது.
தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு,2 பொதுத்துறை,16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2023-24 அரவைப் பருவத்தில் 15.06.2024 வரை 30.82 இலட்சம் மெ.டன் கரும்பை அரவை செய்து, 8.92 சதவிகித சர்க்கரை கட்டுமானத்தில் 2.75 இலட்சம் மெ.டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளது.

கரும்பு உற்பத்தி: உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையை விற்பனை செய்து கரும்பு பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சர்க்கரை விற்பனை மூலம் கரும்பு பணம் முழுமையாக வழங்க இயலாத சூழ்நிலையில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழிவகைக் கடன் அனுமதிக்கப்பட்டு கரும்பு பணம் நிலுவையின்றி வழங்கி முடிக்கப்படுகிறது.

கடந்த 2020-21 அரவைப் பருவம் முதல் 2022-23 அரவைப் பருவம் வரை கரும்பு நிலுவை தொகை வழங்கவும்,ஆலைகளின் நடைமுறை மூலதனத்திற்காகவும் தமிழ்நாடு அரசு ரூ.600.37 கோடி வழிவகைக் கடனாக அனுமதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கரும்பு பணம் நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது.

அரவை பருவம்: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளால் நடப்பு 2023-24 அரவைப் பருவத்திற்கு வழங்க வேண்டிய ரூ.920.99 கோடியில் 15.06.2024 வரை ரூ.835.73 கோடி வழங்கப்பட்டு நிலுவையாக ரூ.85.26 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.கரும்பு விவசாயிகளின் நலன் பாதுகாக்கும் வகையில் கரும்பு பணம் விவசாயிகளுக்கு நிலுவையின்றி வழங்கிடவும் ஆலைகளின் நடைமுறை மூலதன செலவிற்காவும் ரூ.94.49 கோடி வழிவகைக் கடன் அனுமதித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று இவ்வாறு தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.