உளவுத்துறையை மறைமுகமாக வைத்து ஆர்எஸ்எஸ்-ஐ தாக்கும் தமிழக அரசு! 50 இடங்களில் மூன்றுக்கு மட்டுமே அனுமதி!
ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அக்டோபர் இரண்டாம் தேதி நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஏனென்றால் அச்சமயத்தில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் மீது வழக்கு போடப்பட்டு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சூழலில் அனுமதி வழங்கினால் சமூக சீர்கேடு உண்டாகும் என்ற எண்ணி காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
தற்பொழுது நவம்பர் மாதம் ஆறாம் தேதி ஆர் எஸ் எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர். இது குறித்த இந்த வழக்கு இன்று மீண்டும் அமர்வுக்கு வந்தது. 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில் தற்பொழுது மூன்று இடத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், உளவுத்துறை தந்த தகவலின் அடிப்படையில் இந்த மூன்று இடத்தில் மட்டுமே அணிவகுப்பு நடத்த முடியும். 47 இடங்களில் அனுமதி வழங்க இயலாது.
அதுமட்டுமின்றி சூழலைப் பொறுத்து 23 இடங்களில் வேண்டுமானால் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக் கொள்ளலாம் அதற்கு நாங்கள் அனுமதி தருகிறோம் என தெரிவித்துள்ளனர். இதை தவிர மற்ற 24 இடங்களுக்கு அனுமதி தர முடியாது எனக் கூறியுள்ளனர். இதற்கு எதிர் தரப்பினர், உளவுத்துறை அறிக்கை வைத்துக் கொண்டு தமிழக அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது என கூறினர்.இரு தரப்பு வாத்தி கேட்ட நீதிபதி கூறியதாவது, உளவுத்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஆராய்ந்த பிறகு தான் 47 இடங்களுக்கும் அனுமதி வழங்க முடியுமா அல்லது வழங்க முடியாதா என்று கூற முடியும் என தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை வரும் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.