கடைசி வரை விடாமல் போராடிய பங்களாதேஷ்… 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!

0
114

கடைசி வரை விடாமல் போராடிய பங்களாதேஷ்… 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!

இந்திய அணி பங்களாதேஷை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிய்ல் தொடர்ந்து சொதப்பி வந்த கே எல் ராகுல் இந்த போட்டியில் அரைசதம் அடித்து கலக்கினார். அதே போல விராட் கோலியும் 44 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து அசத்தினார். வழக்கம் போல சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இந்தியா நிர்ணயித்த 185 ரன்களைத் துரத்த் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதிரடியாக போட்டியை தொடங்கியது. குறிப்பாக அந்த அணியின் லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 6 ஓவர்கள் முடிவில் மழையால் போட்டி பாதிக்கப்பட்டதால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இலக்கு 151 ரன்களாக குறைக்கப்பட்டது.

மழைக்குப் பின்னர் போட்டி தொடங்கிய போது இந்திய அணியின் திருப்புமுனை விக்கெட்டாக லிட்டன் தாஸ் ரன் அவுட் ஆனார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தாலும், பங்களாதேஷ் அணியும் இலக்கை நெருங்கிய படியே வந்தது.

கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் அந்த ஓவரில் 14 ரன்கள் கொடுத்து இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்தார்.

முன்னதாக மழை காரணமாக 6 ஓவர்களில் போட்டி நிறுத்தப்பட்ட போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பங்களாதேஷ் அணி 17 ரன்கள் முன்னிலை பெற்றது. மழை தொடர்ந்து பெய்திருந்தால் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.