Breaking News

தமிழக அரசு வேலை..! மாதம் ரூ.8,500 ஊதியம்.. வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

தமிழக அரசு வேலை..! மாதம் ரூ.8,500 ஊதியம்.. வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக “சுத்தம் செய்பவர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற 08 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: கடலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்

பணி:

*சுத்தம் செய்பவர்

பணியிடங்கள்: 01

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 08 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்பட்ச வயது 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பணி குறித்து கூடுதல் விவரங்களை அறிய cuddalore.nic.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08-02-2024 விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஆகும்.