சிகிச்சையின் போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசின் புதிய முயற்சி

Photo of author

By Parthipan K

சிகிச்சையின் போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசின் புதிய முயற்சி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளைக் கொடுப்பதற்காக ரோபோக்களை இன்று முதல் பயன்படுத்துகிறது.

தமிழகம் இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது அந்த நோய்த்தொற்று செவிலியர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்கவே நம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் அவர்கள் சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் ரேபோக்களைக் களமிறக்கியுள்ளார்.

நோயாளிகளுக்கு மருந்து மற்றும் உணவுகளைக் கொண்டு கொடுப்பதற்கு இந்த ரோபோ உதவியாக இருக்கும் என்றும் இந்த ரோபோக்களை மருத்துவமனையில் பணிபுரியும் செவவிலியர்களே இயக்குவர் என்றும் கூறியுள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸிலிருந்து நம்மைக் காப்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். இவருடைய செயல்கள் அனைவராலும் பாராட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.