தமிழக அரசு புதிய நடவடிக்கை.. மாணவர்களுக்கு இனி பள்ளிகளில் இதுவும் வழங்கப்படும்!! 

Photo of author

By Rupa

 

தமிழக அரசு புதிய நடவடிக்கை.. மாணவர்களுக்கு இனி பள்ளிகளில் இதுவும் வழங்கப்படும்!!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்தவகையில் இலவச நோட்டு புத்தகங்கள் எனத்தொடங்கி சீருடைகள் வரை அனைத்தையும் வழங்கி வருகிறது.மேலும் திமுக ஆட்சிக்கு வந்து மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தையும் கொண்டுவந்தது.மாணவர்கள் இடைநிற்றல் மற்றும் குடும்ப சூழல் காரணமாக இதனை அமல்படுத்தியது.

முன்னதாக நடைமுறையில் இருந்த சத்துணவு திட்டம் போல் இந்த திட்டம் முதன் முறையாக தமிழகத்தில் தான் நடைமுறை படுத்தப்பட்டது.மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பள்ளி திறப்பானது வெயிலின் தாக்கத்தால் சற்று தாமதமானது. பள்ளி திறப்பு தாமதமானாலும் மேற்கொண்டு பள்ளி முதல் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடும் செய்யப்பட்டது.அதுமட்டுமின்றி பள்ளிக்கு விடுமுறை முடித்து வருகை புரியும் மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்கும் விதமாக தமிழக அரசு புதிய ஏற்பாடு ஒன்றை செய்தது. அதுதான் சர்க்கரை பொங்கல் வழங்குதல்.

இதற்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.இதனை மையப்படுத்தி தற்போது தமிழக அரசு புதிய நடவடிக்கை ஒன்றை அமல்படுத்த உள்ளது.இனி வரும் நாட்களில் முக்கிய தலைவர்கள் பிறந்தாநாள் உள்ளிட்ட சிறப்பு தினங்களில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்ககப்படும் எனக் கூறியுள்ளனர்.இத்திட்டமானது விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.