தமிழர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! அயல் நாட்டு வேலை வாய்ப்பு வழங்கும் தமிழக அரசு!!

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் பல வேலைகளை குறிப்பிட்ட அதில் முன்னு அனுபவம் உள்ளவர்கள் தங்களுடைய நாட்டிற்கு பணிக்கு தேவை என சார்ஜா நாட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் தெரிவித்து இருக்கிறது.

 

அதன்படி அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் குறிப்பிட்டு இருக்கக்கூடிய பணி விவரங்கள் :-

 

✓ எஃகு கட்டமைப்பு உற்பத்தியாளர்கள்

✓ சிஎன்சி லேசர் வெட்டும் இயந்திர ப்ரோக்ராமர் மற்றும் ஆபரேட்டர்

✓ போர்க் லிப்ட் மற்றும் ஜேவிசி ஆப்பரேட்டர்

✓ ஹெவி பஸ் டிரைவர்

✓ பிர்ஸ்டோல் & ஷூட் மெட்டல் டை தயாரிப்பாளர்

✓ சிஎம்சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் ப்ரோக்ராமர் மற்றும் ஆபரேட்டர்

✓ மார்க்கெட்டிங் பொறியாளர்

✓ உற்பத்தி பொறியாளர்

✓ கியூ ஏ / க்யூ சி ஆவண கட்டுப்படுத்தி

✓ தொழில்துறை மின் எலக்ட்ரீசியன்

✓ கருவி தொழில்நுட்ப வல்லுனர்

✓ டீசல் இன்ஜின்கள் மற்றும் பட்டறை இயந்திர பராமரிப்பு

✓ ஸ்பிலிட் ஏசி/விண்டோ ஏசி/சென்ட்ரல் ஏசி தொழில்நுட்ப வல்லுநர்

✓ ஸ்டோர் கீப்பர்

 

மேலே கூறப்பட்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாக தமிழ்நாடு அயல்நாட்டு வேலை நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த பணிகளுக்கான நேர்காணல் இன்று மற்றும் நாளை காலை 9 மணி முதல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலுக்கு வரக்கூடியவர்கள் பயோடேட்டா பாஸ்போர்ட் ஒரிஜினல் மற்றும் அதனுடைய காபி போட்டோ ஆகியவற்றுடன் அயல் நாட்டு வேலை நிறுவனம் முகவரிக்கு நேரில் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முகவரி :-

 

அயல் நாட்டு வேலை நிறுவனம் தமிழ்நாடு அரசு நிறுவனம்,

ஒருங்கிணைந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வளாகம்,

42 ஆலந்தூர் ரோடு,

திருவிக தொழிற்பேட்டை,

கிண்டி,

சென்னை – 32