நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு!

Photo of author

By CineDesk

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு அபராதம் இல்லை தமிழக அரசு உத்தரவு! 

தமிழகத்தில் நியாயவிலைக்  கடைகள் மூலம் மக்களுக்கு அனைத்து உணவு பொருட்களும் இலவசமாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். மேலும் நியாயவிலை கடைகளில் பொருட்கள் தரமாகவும், சரியான அளவிலும் வழங்கப்படுகிறதா, ரேஷன் பொருட்கள் கடத்தப்படுகிறதா என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் எல்லா நியாயவிலை கடைகளிலும் ஆய்வுகள்  மேற்கொண்டு வருகின்றனர்.

உணவு பொருட்களின் எடையில் சிறிது மாற்றம் இருந்தாலும் நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கூட்டுறுவு செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் பொருட்களின் இருப்பு, பொருட்கள் சரியான அளவில்  வழங்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.

உணவு பொருட்களின் எடை குறைவாக இருப்பதை காரணம் காட்டி ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது. இதுபோல் அதிகாரிகள், ஊழியர்களுக்கு அபராதம் விதிப்பதால் ஊழியர்கள் பயம் காரணமாக எடை அதிகமாக இருக்க உணவு பொருட்களை நிரப்புகின்றனர். மேலும் அதிகாரிகள் தரமான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.