சூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை

0
162
#image_title
சூடானில் தமிழர்கள் தவிப்பு! மத்திய அரசு தீவிர நடவடிக்கை.
சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் ஏற்பட்டு கடும் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. இதில் நாடு முழுவதும் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலினால் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 3,351 பேர் காயமடைந்துள்ளதாகவும் (WHO) உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த மோதலுக்கு மத்தியில் சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது. இந்த மீட்புப்பணிக்கு ஆபரேஷன் காவேரி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆபரேஷன் மூலம் சூடானில் சிக்கி தவித்த சுமார் 500 இந்தியர்கள் அந்நாட்டு துறைமுகத்தை ஏற்கனவே வந்தடைந்த நிலையில், தற்போது முதற் கட்டமாக 278 இந்தியர்கள் கப்பல் மூலம் ஜெட்டா நகருக்கு புறப்பட்டுள்ளனர்.
இதனிடையே சூடானில் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளதாகவும். அவர்கள் வாட்ஸ் அப் குருப் ஒன்றை ஆரம்பித்து அதில் தங்களது விவரங்கள், எந்த பகுதியில் இருக்கிறோம் என்ற தகவல்களை பகிர்ந்துள்ளனர். இதுவரை 84 தமிழர்கள் வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்பி உள்ளனர்.
மேலும் மின்சாரம், இணையதள வசதிகள் மூடங்கிபோய் உள்ளதால், பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், துறைமுக பகுதிக்கு வரமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனிடையே கடலூரை சேர்ந்த 28 பேர் டைல்ஸ் பணிக்கு சென்றுள்ள அவர்கள் தங்களை காப்பாற்றும் படி விடியோ ஒன்றை வெளியிட்டுள்னர். அவர்களில் 17 பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அங்குள்ள  சூடான் துறைமுகத்துக்கு 500 இந்தியர்கள் வந்துள்ளனர் என்றும், அவர்கள் அணைவரும் பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வரபடுவார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.