மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு !

Photo of author

By Kowsalya

மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு !

சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 முட்டைகள் வழங்குமாறு ஆணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. மேலும் அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்

” சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு மற்றும் உலர் பொருட்கள் வழங்குவதோடு சேர்த்து மாதம் 10 முட்டைகள் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. ஏற்கனவே உலர் பொருட்கள் வழங்குவது தொடர்பாக அரசு பிறப்பித்த ஆணையின்படி அதே வழிமுறையைப் பின்பற்றி இந்த முட்டைகள் வழங்கும் முறையையும் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளது”.

மேலும் கொரோனா வைரஸால் மக்களுக்கு பயன்படும் நல திட்டங்களை அரசு வழங்கி வருவதால்  சமூக நல ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களும் இந்த வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.