அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு!!

Photo of author

By Gayathri

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு!!

Gayathri

Tamil Nadu government orders to start admissions in government schools!!

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மார்ச் மாதம் முதல் நாளில் இருந்து தொடங்க வேண்டும் என முதல்வர் மு.க .ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது பூர்த்தி அடைந்தோர் ஒருவர் கூட விடாமல் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களை அவர்களின் வயதிற்கேற்ற வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகை,பள்ளி சீருடைகள் ,ஊரகப் பகுதிகளில் இருக்கும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு என காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம், புத்தகங்கள் இன்னும் சில பொருட்கள் வழங்கப்படுகிறது எனவே ஆசிரியர்கள் மாணவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

அரசுப் பள்ளிகளின் சிறப்புகள்:

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் பள்ளியை விட்டு நின்று விடக் கூடாது என்பதை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக மிதிவண்டி மற்றும் மடிக்கணினி, உதவித்தொகை என அனைத்து வசதிகளையும் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை விட மதிப்பெண் சதவீதம் அதிகமாக எடுத்துக் கொண்டு வருகிறார்கள். எனவே தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் முதலிடத்தில் இருக்க வேண்டும் எனவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது, மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் படிக்கும் பாடங்கள் தவிர உடற்கல்வி, வானவில் மன்றம்,மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் (சிலம்பம்,ஈட்டி எறிதல் மற்றும் சில) மாணவர்கள் கலந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளியை காட்டிலும் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல .

இதனால் அங்கன்வாடியில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் எவரேனும் இருந்தால் அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர்,தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி இயக்குனர் அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களின் சேர்க்கை அதிகமாக இருக்க வேண்டும் என்றும் பள்ளியில் சேரும் மாணவர்களை (EMIS) என்ற இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.