காங்கயம் பரஞ்சேர்வழி அருகே, ரூ.8 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் தமிழக அரசு!!

Photo of author

By Gayathri

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் பகுதியில், காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி மற்றும் ஈரோடு மாவட்டம் பசுவப்பட்டி இடங்களில், நொய்யல் ஆற்றின் பாசனம் பல லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதனால், இந்த பகுதிகளில் விவசாய பணிகள் மற்றும் தொழில்கள் செய்யும் மக்கள் நாள்தோறும் செல்கிறார்கள். ஆனால், நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், இந்த மக்கள் பல இடங்களை சுற்றி சென்று வர வேண்டிய அவசியம் உள்ளது. இதனால், பயண நேரம் அதிகரித்து, போக்குவரத்து சிரமங்கள் ஏற்படுகின்றன.

இதனால் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில், நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.8.9 கோடியில் மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறி, அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. நொய்யல் ஆறு, கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கோவை மாவட்டம், திருப்பூர் மாவட்டம் வழியாக, ஈரோடு அருகே கரூர் செல்லும் பாதையில் பயணித்து, திருச்சிக்கு செல்லும் வழியில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

இந்த நொய்யல் ஆற்றின் பாசன வசதி கொங்கு மண்டலத்தில் விவசாயத்திற்கு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. பல பகுதிகளில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இதனை எளிதில் பயன்படுத்தி, விவசாய பொருட்களை கொண்டு செல்லவும், பாசனம் செய்யவும் வசதியாக இருக்கின்றனர்.

காங்கயம் பரஞ்சேர்வழி அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே குருக்கல்பாளையம் சாலையில், நொய்யல் பூச்சிக்காடு வலசு, தப்பியங்காடு ரோடு வரை உள்ள பகுதியில் ரூ.8 கோடிக்கும் 92 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் ஒரு மேம்பாலம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம் 80 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள். மேம்பாலம் அமைப்பதால், போக்குவரத்து 5 கிலோமீட்டர் குறையும். இதன் மூலம், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறந்த முறையில் பயணித்து, செலவுகளையும் நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும். இந்த மேம்பாலம், இரு மாவட்டங்களுக்கு இடையே நேரடியான தொடர்பை உருவாக்கி, போக்குவரத்தை எளிதாக்கும்.