விவசாய பயிர் நிலங்களில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக குறைந்த சம்பளத்தில் வட மாநில தொழிலாளர்களை விவசாயப் பணியில் ஈடுபடுத்துவது குறித்த பல முடிவுகளை மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் முன்னெடுத்து இருக்கின்றனர்.
காவிரி கடைமடை டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிலும் குறிப்பாக சீர்காழி தாலுகாவில் மட்டும் 1 லட்சுமி ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் இங்கு மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் விவசாயிகளின் பாசனத்திற்கு பயன்படுவது இல்லை என குற்றம் சாட்டியதோடு வாய்க்கால்களை தூர்வாரும் பணியானது முறையாக நடைபெறாததால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு காவிரி நீர் வந்து சேர்வதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே மயிலாடுதுறை சீர்காழி பகுதிகளில் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காக மின் மோட்டார்கள் சமீபமாக தமிழக அரசின் உடைய புதிய திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்ததோடு இங்கு மும்முனை மின்சாரமானது பெறப்பட்டு அதன் அடிப்படையில் தான் விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. தண்ணீர் மின்சாரம் என இவை கிடைத்தாலும் ஆட்கள் கிடைப்பது சிரமமாகவே உள்ளதாகவும் இந்த பகுதிகளில் இருக்கக்கூடியவர்களை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அழைத்துக்கொள்வதால் விவசாயத்திற்கு ஆட்பற்ற குறை அதிக அளவில் உள்ளது என்றும் தெரிவித்திருக்கின்றனர். இயந்திரங்களை வைத்து நடவுப் பணிகளை செய்தாலும் மழை வரும் காலங்களில் பயிர்கள் மூழ்கி நாசமாவதால் ஆட்களை வைத்தே நடவு பணி மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்து வடமாநிலத்தவர்களை வேளையில் இறக்கி இருக்கின்றனர் மயிலாடுதுறை விவசாயிகள்.
அரசிற்கு விவசாயிகள் பல கோரிக்கைகள் வைத்தும் அரசு அதனை கண்டு கொள்ளாததால் தற்பொழுது வடமாநில தொழிலாளர்களை நம்பி விவசாயம் மேற்கொள்வதாக விவசாயிகள் தெரிவித்ததோடு ஏக்கருக்கு 8000 முதல் 8,500 வரை வழங்கி வந்த நிலையில் வடமாநிலத்தவர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 4500 மட்டுமே சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் காலை 6:00 மணிக்கு வேலை துவங்கி மாலை வரை 4 ஏக்கர்களை நடவு பணி முடிக்கப்பட்டு விடுவதாகவும் சாப்பாட்டிற்கு அரிசி மட்டும் கொடுத்தால் போதும் என்ற நிலை இருப்பதால் விவசாயிகளுக்கு பெருமளவு பணம் மிச்சமாகும் என்ற காரணங்களாலும் குறிப்பாக குத்தாலம் தாலுகா கோனேரி ராஜபுரம் ஊராட்சி வைகல் கிராமத்தில் அதிக அளவு வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.