சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியரின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பல்கலைக்கழக வெளியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசை எதிர்த்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். மேலும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதன்படி இன்று நண்பகல் 12: 30 மணிக்கு ஆர்.என்.ரவி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு செல்ல உள்ளார். மேலும் பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் மற்றும் பேராசிரியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிசிடிவி கேமராக்கள் ஏன் வேலை செய்யவில்லை என்று என்ற குற்றச்சாட்டு தொடர்பான செயல்பாடுகளை குறித்து ஆலோசனைகள் நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.