ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குட்டு வைத்த தமிழக அரசு!! இது தான் கட்டணம்.. பறந்த அதிரடி உத்தரவு!!

Photo of author

By Gayathri

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு குட்டு வைத்த தமிழக அரசு!! இது தான் கட்டணம்.. பறந்த அதிரடி உத்தரவு!!

Gayathri

Tamil Nadu Govt opposes decision of Auto Drivers Federation!! Old fare will be followed!!

ஆட்டோ ஓட்டுனர் கூட்டமைப்பானது தற்பொழுது1.8 கி.மீ தொலைவிற்கு ரூ.50 மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஒவ்வொரு கி.மீ தொலைவிருக்கும் ரூ. 18 என முடிவு செய்த நிலையில் தமிழக அரசானது அதனை நிராகரித்திருக்கிறது.

இது குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது :-

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது என்றும் அப்பொழுது 1.8 கி.மீ தொலைவிற்கு ரூ.25  மற்றும் அதனை தொடர்ந்து வரும் ஒவ்வொரு கி.மீ தொலைவிருக்கும் ரூ.12 என அறிவிப்பு வெளியானதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் , அன்று 1 லிட்டர் பெட்ரோல் விலையானது ரூ.66.85 எனவும் தற்பொழுது 1 லிட்டர் பெட்ரோல் விலையனாது ரூ.100 க்கும் மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாற்றியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை என அனைத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டதாகவும் தங்களுக்கான ஆட்டோ கட்டணம் மட்டும் உயரவில்லை என்றும் வருத்தம் தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க வழக்கு தொடரப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

ஆட்டோ ஓட்டுனர் கூட்டமைப்பினரின் முடிவை எதிர்த்த தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது :-

போக்குவரத்து துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவதற்கான எந்த ஒரு முடிவையும் தற்பொழுது தமிழக அரசு எடுக்கவில்லை என்றும் அதற்கான பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஆட்டோ ஓட்டுநர்கள் தன்னிச்சையாக ஆட்டோ கட்டணத்தை உயர்த்திக் கொண்டால் அவர்கள் மீது நுகர்வோர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலக நுகர்வோர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்றும் அந்த புகாரின் பேரில் ஆட்டோ ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று ஜனவரி 31 அன்று வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது