பெண்களுக்கு இந்த கருவி பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் !!மருத்துவர்களை பாராட்டி வரும் உயர் அதிகாரிகள் !..
சென்னையில் தேசிய அளவில் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு கருத்தடை கருவி பொருத்துவதில் தமிழகம் முதல் இடம் பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக மத்திய அரசு விருதும் வழங்கிவயுள்ளது. இந்த விருதை குடும்பநலத்துறை இயக்குனர் ஹரிசுந்தரி மற்றும் உயர் அலுவலர்கள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பகிர்ந்துகொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது,டெல்லியில் மக்களின் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மூலம் தேசிய குடும்ப கட்டுப்பாடு உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் கருத்தடை கருவி பொருத்தியதில் தமிழ்நாடு தேசிய அளவில் முதல் இடம் பெற்றது.இதற்காக சிறப்பு விருது ஒன்று அளிக்கப்பட்டது.
பிரசவத்திற்கு பின் பொருத்தப்படும் இந்த கருத்தடை கருவிகள் 5 ஆண்டு முதல் 10 ஆண்டு காலத்திற்கு பயன்படுத்தப்படும் வகையில் அமையும் தற்காலிக கருத்தடை முறையாகும். இந்நிலையில் தமிழ்நாடு கடந்த 3 ஆண்டுகளில் இந்த கருத்தடை முறை பயன்பாட்டில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 2021-22-ம் ஆண்டில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 28 கருவிகள் பெண்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
அதன்படி மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இந்திய அளவில் முதல் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் குடும்பநலத்துறையும் கருத்தடை கருவி பொருத்துவதில் இந்திய அளவில் முன்னிலை வகித்து வருகிறது.மேற்கூரியப்படி அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் உடன் இருந்தனர்.மேலும் அதில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களையும் செவிலியர்கலையும் பாராட்டி வருகின்றனர்.