அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்ததை அப்படியே காப்பியடிக்கும் அரசியல் கட்சிகள்
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வேட்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் வேட்பமனு தாக்கல் செய்துள்ளார்.அதே நாளில் திமுக தலைவர் ஸ்டாலின்,நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வேட்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவிற்கு நேரிடையான போட்டி நிலவி வருகிறது.அதே நேரத்தில் இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி,தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தனித்து களமிறங்கியுள்ளது.இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என்ற வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்காக திமுக பிரசாந்த் கிஷோர் என்ற அரசியல் ஆலோசகரின் வழிகாட்டுதல் படி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.அதே போல அதிமுகவும் தங்களுக்கென அரசியல் ஆலோசகரை நியமித்து அவர்களின் வழிகாட்டுதல் படி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.இந்த கட்சிகளை போல நாம் தமிழர் கட்சியும்,மக்கள் நீதி மைய்யமும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறு அரசியல் கட்சிகள் நடத்தி வரும் தீவிர பிரச்சாரத்தில் முன்பு எப்போதும் இல்லாத சில புதிய அம்சங்களை காண முடிகிறது.அதாவது திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் பிரச்சார மேடையமைப்பு எங்கேயோ பார்த்த மாதிரி தோன்றுகிறது.ஆம் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன் தனித்து களமிறங்கிய பாமகவின் வண்டலூர் மாநாட்டை போன்ற தோற்றமே இந்த இரு கட்சி மேடைகளிலும் காண முடிகிறது.
மாற்றம் முன்னேற்றம் என களமிறங்கிய அன்புமணி ராமதாஸ் ஆட்சி மாற்றத்தை கொடுத்தாரோ இல்லையோ,தமிழக அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.குறிப்பாக தமிழகத்தில் ஒயர்லெஸ் மைக் மற்றும் நடந்து கொண்டே மக்களிடம் பேசுவது உள்ளிட்டவைகளை பாமக வண்டலூரில் நடத்திய அந்த ஹைடெக் மாநாட்டில் தான் அறிமுகப்படுத்தினர்.
அதுமட்டுமல்லாமல் அரசியல் தலைவர்களை சந்திக்க முடியாமல் தவித்திருக்கும் தமிழக மக்களை அவரவர் பகுதிக்கே சென்று அங்குள்ள பிரச்சனைகள் குறித்து பல போராட்டங்களை நடத்தியவரும் அன்புமணி ராமதாஸ் அவர்களே.அவர் ஆரம்பித்து வைத்ததை தான் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் காப்பியடித்து வித விதமான பெயர்களுடன் பொதுமக்களை சந்தித்தார் என்பது குறிப்பிடதக்கது.
அதே போல கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்ததும் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுபயணம் செய்து மக்களை சந்தித்து வந்தார்.இந்நிலையில் சமீபக காலமாக பாமகவின் அறிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலின் காப்பியடிப்பதாக அக்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த பட்டியலில் தற்போது சீமான் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.