தமிழக டாஸ்மாக் ரீதியாக, கூடுதல் மது விற்பனை, அதிகாரிகளுக்கு கொள்முதல் மது ஆலைகளிலிருந்து லஞ்சம் கொடுத்தது அதேபோல ஆலைகளிலிருந்து கொள்முதல் எடுக்கும் பாட்டில்களின் மாறுபட்ட கணக்கு என பல குளறுபடி குறித்து புகார்கள் அமலாக்கத்துறைக்கு வந்துள்ளது. இது ரீதியாக அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமையகம் அதன் நிர்வாகிகள் ஊழியர்கள் என பலரது வீடுகளிலும் சோதனை செய்துள்ளனர்.
மேற்கொண்டு ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு ஊழல் செய்ததாகவும் அறிவிப்பை வெளியிட்டனர். இது அனைத்தும் ஆளும் கட்சியான திமுகவிற்கு அடுத்த அடுத்த இடியை இறக்கியது போல இருந்தது. இது ரீதியாகத்தான் தற்பொழுது டாஸ்மாக் சார்பாக உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் கொடுத்துள்ளனர். அதில் மாநில அரசு அனுமதியின்றி எப்படி அமலாக்க துறையால் சோதனை செய்ய முடியும்?? இரண்டாவதாக இந்த சோதனையின் மூலம் பல ஊழியர்கள் இன்னல் பட்டு வருகின்றனர்? அதேபோல யாருடைய அனுமதியுமின்றி சோதனையின் பேரில் எப்படி அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பி இதையெல்லாம் தடை செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்து நீதிபதிகள் முன்னிலையில் வாதாடப்பட்டது. தமிழக டாஸ்மாக் தலைமைக்கு வாதாடிய வக்கீல், பல உள்நோக்கங்கள் கொண்டு இந்த சோதனை நடத்துவதாக முறையிட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஆயிரம் கோடி வரை மோசடி என கூறியது யுகத்தின் அடிப்படியில் தான் என்றும் கூறியுள்ளார். இதனை விசாரணை செய்த நீதிபதிகள் வழக்கை இம்மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி மேற்கொண்டு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்துள்ளனர். அதேபோல வரும் 25ஆம் தேதி அமலாக்கத்துறை எப்படி அனுமதியின்றி சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்து விவரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.