தமிழக கோவில்களுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவற்றை முடக்கம் குறித்த ஆணை!!

Photo of author

By Rupa

தமிழக கோவில்களுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவற்றை முடக்கம் குறித்த ஆணை!!

Rupa

Tamil Nadu Temples High Court issued an action order! Order on Freezing of Special Puja Fees!!

தமிழக கோவில்களுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! சிறப்பு பூஜை கட்டணம் உள்ளிட்டவற்றை முடக்கம் குறித்த ஆணை!!

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் மார்க்கண்டன். இவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தார். அதில், பல திருத்தலங்களில் சில மோசடி கும்பல்கள் போலி இணையதளம் வாயிலாக கோவில் நிர்ணயித்த விலையை காட்டிலும் சிறப்பு பூஜைகளுக்கு அதிகமாக வசூல் செய்து வருவதாக கூறியிருந்தார். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அங்கு சிறப்பு பூஜைக்கு வருபவர்களிடம் இந்த மோசடி கும்பல் போலி இணையதளம் வாயிலாக ஆயிரம் கணக்கில் வசூல் செய்து வருகின்றன.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அறுபதாம் கல்யாணம் நடத்த ரூ. 2000 மட்டுமே வாங்கி வருகின்றனர். ஆனால் இந்த போலி இணையதளம் மூலம் ஒரு 2000 முதல்  4 லட்சம் வரை வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு கோவில் பெயரை வைத்துக் கொண்டு மோசடி கும்பல் செய்யும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கானது இன்று அமர்வுக்கு வந்தது. இவ்வாறு கோவில்களின் பெயரை வைத்துக்கொண்டு தனியாக செயல்பட்டு வரும் போலி இணையதளங்களை முடக்க வேண்டும் எனக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல கோவில்களின் பெயரில் தனியாக இணையதளம் செயல்படுவதை ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இவ்வாறு போலி இணையதளம் வைத்து நடத்துபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் மக்களின் மத உணர்வுகளை வியாபாரம் ஆக்க வேண்டாம் என நீதிபதி கூறியுள்ளார். அதேபோல போலி இணையதளம் நடத்துவது மற்றும் அதனை முடக்குவது குறித்து குற்றவியல் நடவடிக்கைகளை கோயிலின் இணை ஆணையர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.