ஆசியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்!! முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம்!! முக ஸ்டாலின்!!

Photo of author

By Preethi

ஆசியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்!! முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம்!! முக ஸ்டாலின்!!

Preethi

Tamil Nadu to become the premier state in Asia !! Tamil Nadu is the first address of investors !! Facial Stalin !!

ஆசியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்!! முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம்!! முக ஸ்டாலின்!!

 

தமிழகம் தொழில்துறையில் தற்போது பெரிதும் வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்களின் தொழில்களை பெரிதும் வளர்த்து வருமகின்றனர். இந்நிலையில் இன்று தொழில்துறை சார்பில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழகம் என்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ரூ.17,141 கோடி முதலீட்டில் 55,054 பேருக்க வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 35 தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்ப்டது.

 

மேலும் ரூ.7,117 கோடி மதிப்பில் 6,798 பேருக்கு வேலைவாய்ப்புகளை அமைக்கும் வகையில் 5 திட்டப்பணிகளை துவக்கிவைத்தல் நிகழ்ச்சிகளும் மற்றும் ரூ.4,250 கோடி முதலீட்டில் 21,630 பேருக்க வேலைவாய்ப்புகளை அமைக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் கூறியதாவது: பண்பாட்டின் முகவரியாக திகழும் தமிழகம் இப்பொது முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாறி கொண்டே இருக்கிறது.

 

தமிழகம் கண்டிப்பாக முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாறும். தமிழகம், தொழில் துவங்க ஏற்ற மாநிலங்களில் தெற்காசியாவிலேயே முதல் மாநிலம் என உருவாக்கப்படும். இதுவே தமிழகத்தின் முதல்வரான எனது லட்சியம். ஒரு லட்சம் கோடி டாலர் GTP கொண்ட மாநிலமாக தமிழகம், 2030ம் ஆண்டுக்குள் மாறும். உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகள் நிறுவப்படும். மின்வாகன உற்பத்தி போன்ற இந்தியாவில் வளர்ந்து வரும் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம். அதிகளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.