தமிழகம் சொர்க்கமாக மாறிவிடும்! எடப்பாடி போடும் மந்திரம்!

Photo of author

By CineDesk

தமிழகம் சொர்க்கமாக மாறிவிடும்! எடப்பாடி போடும் மந்திரம்!

CineDesk

Updated on:

Tamil Nadu will become a paradise! Only to be put off!

தமிழகம் சொர்க்கமாக மாறிவிடும்! எடப்பாடி போடும் மந்திரம்!

இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சட்டமன்ற தேர்தலுக்காக பல கட்டங்களில பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதில் பல அரசியல் பிரமுகர்கள் அவரவர் தொகுதிகளில் பல நூதன முறையிலும் மக்ககளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் லஞ்சங்கள் கொடுத்ததும், பொதுமக்களை கவரும் வகையில் பேசி வாக்கு சேகரித்து  வருகிறார்கள்.

இதில் சில கட்சி தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக, பிற கட்சிகளின் குறைகளை சுட்டி காட்டி  அந்த கட்சிகளின் மூக்கை உடைக்கும் சம்பவங்களும் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கும்மிடிபூண்டியில் உள்ள தண்டலம் பகுதியில் பா.ம.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.இந்த பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில்.

சூவிடன், நார்வே, பின்லாந்து போன்ற நாடுகள் கல்வி மற்றும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. மேலும் மகிழ்ச்சியான நாடு என்ற பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. அதே போல் நம் தமிழகத்தையும் சொர்க்க பூமியாக மாற்ற வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர் கூறினார்.பாமக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி மக்களின் மனதை மாற்றி வாக்குகளை சேகரித்து வருவது அக்கட்சியினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் பாமக எப்பவும் தனித்தன்மையுடன் செயல்படும் என்பதை பெரும்பாலோனோர் அறிவர்.அதிமுக வெற்றி பெற்றால் பாமகவின் ஆலோசனையுடன் செயல்பட்டு அதிமுக நல்ல ஆட்சியை தரும் என்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.இந்த வகையில் பிரச்சாரத்தை மேற்கொள்வதால் படித்த இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.