உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயரா:? கல்வி கட்டணம் வழங்கப்படும்!! அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு!!

Photo of author

By Pavithra

உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயரா:? கல்வி கட்டணம் வழங்கப்படும்!! அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு!!

Pavithra

உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயரா:? கல்வி கட்டணம் வழங்கப்படும்!! அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு!!

தமிழ் பெயர் வைத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் கல்வி கட்டணமும் வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பாக சென்னை சைதாப்பேட்டையில்
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு புடவை ,வளையல்,பூ ,பழம் கண்ணாடி ,கொண்ட சீர்வரிசை தட்டுகள் வைக்கப்பட்டது.மேலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார்:அதாவது குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக கருத வேண்டும் என்றும்,அடுத்து ஆறு மாதத்தில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட இருப்பதாகவும், அந்நிகழ்ச்சியில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும்,கல்வி கட்டணமும் செலுத்தப்படுமென்று அமைச்சர் கூறியுள்ளார்.