ரேஷன் அட்டை தாரர்கள் கவனத்திற்கு!! 15 ஆம் தேதி முதல் இது தான் நடைமுறை!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!

ரேஷன் அட்டை தாரர்கள் கவனத்திற்கு!! 15 ஆம் தேதி முதல் இது தான் நடைமுறை!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!

மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி தற்போது செயல்பட்டு வருகிறது. பாமர மக்கள் பலருக்கும் அரசு வழங்கும் இந்த ரேஷன் பொருட்கள் பயனுள்ளதாக உள்ளது. முதலில் இருந்த ரேஷன் அட்டையை ரத்து செய்து ஸ்மார்ட் கார்டை கொண்டு வந்தனர். அதை கொண்டு வந்ததை அடுத்து பயோ மெட்ரிக் முறையில் மக்களின் கைரேகை பதிவிட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த பயோமெட்ரிக் முறையால் பல இடங்களில் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

பலரின் கை ரேகையானது சரியான முறையில் விழாததால் பொருட்கள் தர முடியாமல் போகிறது. இதனை தடுக்க இனி வரும் நாட்களில் கருவிழி பதிவு முறை அமல்படுத்தப்படும் என உணவு வழங்கல் துறை அமைச்சர் சங்கரபாணி தெரிவித்தார். இந்த நடைமுறையானது இதர மாநிலங்களில் செயல்பட்டு தான் வருகின்றனர். தற்போது தமிழகத்தில் இந்த முறை கொண்டு வரப்பட்டால் மக்கள் அனைவருக்கும் சீராக பொருட்கள் வழங்க இயலும்.

இந்த புதிய செயல்முறையானது அக்டோபர் 15ஆம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த முறையை நடைமுறைப்படுத்த சில நாட்கள் எடுக்கும் என்பதால் அக்டோபர் 15ஆம் தேதி வரை காத்திருக்கும் படி கூறியுள்ளனர். மேலும் வயது முதிர்ந்தோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் , பலரால் நேரடியாக நியாய விலை கடைக்கு சென்று பொருட்கள் வாங்க இயலவில்லை. அவ்வாறு இருப்பவர்கள் அவருக்கு உண்டான விண்ணப்ப படிவத்தை நிரப்பி வேறு ஒருவர் மூலமாக பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.