தமிழ் புத்தாண்டு 2025..!! சித்திரை மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்..!! மேன்மையா..? வீழ்ச்சியா..?

Photo of author

By Janani

தமிழ் புத்தாண்டு 2025..!! சித்திரை மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும்..!! மேன்மையா..? வீழ்ச்சியா..?

Janani

1. மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் ஏழரை சனி தொடங்கினாலும், சூரியனின் அமைப்பால் மன நிம்மதியும், அதிலிருந்து நிவாரணமும் கிடைக்கும். இந்த காலத்தில் அன்புக் குரியவர்களுடன் உறவு வேண்டும்.

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கடின உழைப்பிற்கான நற்பலனைப் பெறுவீர்கள். வேலை, தொழில் போன்றவற்றில் சாதகமான சூழலும், கடினமான வேலைகளையும் எளிதாக செய்து கூடிய முடிக்கக்கூடிய மனம் மற்றும் உடல் பலம் ஏற்படும். அதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

2. ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. போராட்டமான சூழல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

பல்வேறு விதமான நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் மற்றும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.பிள்ளைகள் தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

3. மிதுனம்:

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு சூரிய பகவான் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் உச்சம் பெற உள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையை உங்களின் வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செய்யக்கூடிய உங்கள் வேலையில் வெற்றியும், முன்னேற்றம் உண்டாகும்.

பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். அதுவே உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. தந்தையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உடல் நலம் முன்பை விட மேம்படும். உங்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும்.

4. கடகம்:

கடக ராசியை சென்றவர்களுக்கு இந்த சித்திரை மாதத்தில் கர்ம ஸ்தானத்தில், சூரிய பகவான் உச்சம் பெறுகிறார். இதன் காரணமாக உங்கள் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை பெறுவீர்கள்.

கடினமான நேரத்தில் தந்தையின் ஆலோசனை உங்களுக்கு உதவும். பணியிடத்தில் உங்கள் சிறப்பான செயல்பாட்டால் பதவி, பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். வருமானம் மேம்படும். பல வழிகளில் இருந்து நன்மைகள் அடைவீர்கள்.

5. சிம்மம்:

உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியானது உள்ள நிலவும். மூதாதையர்களின் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் செய்யக்கூடிய தொழில், வேலை போன்றவற்றில் நல்ல வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் இருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வேலை தொடர்பாக இருந்த தடைகள் விலகும். சரியான நேரத்தில் பணிகளை முடிக்க முடியும்.

6. கன்னி:

கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். அதன் காரணமாக சனி பகவானின் ஆசிர்வாதம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் சனி அமர்கின்ற காரணத்தினால் அனைவரது ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

தொழிலில் கூட்டு முயற்சிகள் வெற்றியை தேடி தரும். வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

7. துலாம்:

கடந்த மூன்று ஆண்டு காலமாக இருந்த அனைத்து பிரச்சனைகளும் தற்போது முடிவுக்கு வரும். நல்ல பலனை கொடுக்கக் கூடிய விதத்தில் இடமாற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றியில் முடியும். போட்டி பொறாமைகள் குறையும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தடைகள் ஏற்பட்டாலும் குலதெய்வத்தை வணங்க செல்ல வேண்டும். முதலீடு தொடர்பான செயல்களில் கவனம் தேவை.

8. விருச்சிகம்:

வீட்டில் மிகப் பெரிய சுபகாரியம், சந்தோஷம், நிம்மதி என்பது கண்டிப்பாக ஏற்படும். தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகள் சார்ந்த விஷயத்தில் கவனம் தேவை. தேவையில்லாத அவதூறு, பலி உங்கள் மீது ஏற்படும்.

9. தனுசு:

தனுசு ராசிக்கு 5ம் வீட்டில் சூரிய பகவான் உச்சம் பெறுகிறார். இதன் காரணமாக உங்களின் கல்வி, கேள்விகளில் முன்னேற்றம் பெறுவீர்கள். அரசு வேலை தொடர்பாக நல்ல செய்திகள் கிடைக்கும். உங்கள் திறமைக்கான பாராட்டும், புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பணியிடத்தில் எதிரிகளின் தொல்லை சேரும். உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்பதால் தொழில், வியாபாரம் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

10. மகரம்:

தமிழ் புத்தாண்டு உங்களுக்கு ஒரு சிறந்த காலமாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த காலகட்டத்தில் உங்களது சிக்கல்கள் அனைத்தும் தீரும். இந்த ஆண்டு முதல் உங்களுக்கு ஏழரை சனியில் இருந்து விடுதலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களால் முன்னேற்றம் கிடைக்கும்.

11. கும்பம்:

ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெற்று கொண்டிருக்கிறது. 2-ல் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் இருந்து மாதம் தொடங்குவதால் மனக்குழப்பம் அதிகரிக்கும்.உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காது. எந்த செயலையும் நினைத்தவுடன் செய்ய இயலாது. அர்த்தாஷ்டம குருவின் ஆதிக்கமும் இருப்பதால், தொழிலில் சில இடையூறு வந்துசேரும். தொகை வருவதிலும் தாமதங்கள் ஏற்படும். எதிலும் கவனத்தோடு செயல்பட வேண்டும்.

12. மீனம்:

இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும். உடன்பிறப்புகளின் வழியே உருவான பகை மாறும். வழக்குகள் சாதகமாக முடியும்.
நட்பால் நன்மை கிடைக்கும். நாகரிகமாக வாழ, தேவையான வசதிகள் வந்து சேரும். பல முறை போராடியும் முடிவடையாத சில காரியங்கள் இப்பொழுது முடிவுக்கு வரும். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும். உடல்நலத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.