Tamil Puthalvan Thittam: இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ரூ.1000/- வழங்கப்படும்..!

Photo of author

By Priya

Tamil Puthalvan Thittam: தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொடந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு போன்று காலை சிற்றுண்டி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து முடித்து உயர்க்கல்விக்கு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

தற்போது புதுமைப்பெண் திட்டத்தை போன்று, தமிழ்ப் புதல்வன் திட்டம் (TN New Tamil Pudhalvan Scheme) இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நேற்று 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரி கனவு 2024 வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற இந்த நகழ்ச்சியில் பேசிய தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000/- வழங்குவது போன்று இந்த கல்வியாண்டு முதல் உயர்க்கல்வி பயில கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கும் இனி மாதம் ரூ.1000/- வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதன்படி பள்ளிப்படிப்பை முடித்து விட்டு மாணவர்களை கல்லூரி சென்று பயில இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்றும் கூறினார். அதன்படி 12-ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும் பொறியியல், மருத்துவம், சட்டம் போன்று தங்களுக்கு விருப்பமான துறையில் சென்று படிக்க இந்த திட்டம் உதவியாக இருக்கும் என்று கூறினார். மேலும் இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு யார் கல்லூரியில் சேராமல் இருக்கிறார்களோ அவர்களை கண்டறிய தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரவித்தார். அதன் படி இந்த திட்டம் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இந்த ரூ.1000/- வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க:தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?? முழு விவரம் இதோ!!