கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியுள்ளார். அவர் கனடாவின் பிரதமாக 9 ஆண்டுகள் பதவியில் இருந்து வந்தார். அவர் நேற்று முன் தினம் பதவி விலகுவதாக அறிவித்த நிலையில் அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. அதில் இந்தியாவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டது குறித்து இந்தியாவுக்கு இதில் சம்பந்தம் உள்ளது என கூறினார் ஜஸ்டின் ட்ரூடோ. இந்நிலையில் ஜி 20 மாநாட்டில் மோடியிடம் விவாதம் தொடுத்தார். இந்நிலையில் இவர் பதவி விலகியதை பாஜகவினர் கொண்டாடினர். இதுமட்டுமல்லாமல் அவரின் உட்கட்சியில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் அவர் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் அடுத்த பிரதமராக தமிழர் அனிதா ஆனந்த் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனிதா ஆனந்த் கனேடிய வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் 2024 முதல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக பணியாற்றினார். 2019 கூட்டாட்சி தேர்தலில் இருந்து லிபரல் உறுப்பினராக அமர்ந்து ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் ஓக்வில்லியின் சவாரியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் கொரோனா போது இவர் செய்த பல நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. எனவே இவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இவரை பிரதமராக தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.