ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் பள்ளிகள் இந்த தேதியில் இருந்து செயல்படலாம்! அனுமதி வழங்கிய தமிழக அரசு!

0
134

நோய் தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் கல்லூரிகள் என்று அனைத்து விதமான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதை அடுத்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டனர். இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. அதோடு கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் தொடங்கப் படுவதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. நோய்தொற்று பாதிப்பை அடுத்து அதனை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மற்றும் அண்டை மாநிலங்களில் நோய் தொற்று பாதிப்பு நிலவரத்தை கருத்தில் வைத்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதனை அடுத்து தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்ற அறிவிப்பு ஒன்றில், அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதோடு சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகள், திருவிழாக்கள், குடமுழுக்கு விழாக்கள், உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு முன்னரே விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் எல்லா வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அதோடு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருக்கிற செயல்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து நடக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறது. எல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள், உள்ளிட்டவற்றை நோய்தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தலாம் என்று அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு.

இந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனையின் அடிப்படையில் 9 மற்றும் 10 மற்றும் 11 அதோடு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது இயங்கி வருகின்றன. அதேபோல ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள், பள்ளிக்கு செல்லாமல் பல மாதங்களாக வீட்டிலேயே இருப்பது அவர்களுக்குள் மிகப்பெரிய மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் கற்றல் இடைவேளையும், இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள், பெற்றோர்கள் என்று எல்லோரும் ஒருசேர தெரிவித்ததை அடிப்படையாகக் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான வகுப்புகள் நோய்த்தொற்று நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும், அதற்கான முன்னேற்பாடுகள் போன்றவற்றை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும், பொது இடங்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅரசு பள்ளி மாணவர்கள் இங்கு செல்ல இலவசம்! முதல்வரின் அதிரடி உத்தரவு!
Next articleதொடர்ச்சியாக மூன்று தோல்விகளுக்கு பின் மும்பை அணி பெற்ற முதல் வெற்றி!