முக்கிய அறிவிப்பு: மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது!

0
130

முக்கிய அறிவிப்பு: மின் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது!

சரியான தேதியில் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் போனால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது, பின்னர் இந்தியா முழுக்க தேசிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தியாவின் மாநில எல்லைகள் முடக்கப்பட்டது. தமிழக மாவட்ட எல்லைகளும் முடக்கப்பட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என்று தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

தரைப் போக்குவரத்து கூட தடை செய்துள்ள காரணத்தால் மின் வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின் கணக்கை குறிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மின் கட்டணம் கட்டாத வீடுகளின் மின் இணைப்பை துண்டிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரவியதை அடுத்து, மின் பகிர்மன கழகம் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளது.

சரியான தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்தால், ஏப்ரல் 15 ஆம் தேதி வரை இணையத்தின் மூலம் செலுத்தலாம். மேலும் கட்டணம் செலுத்தாத வீட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்படாது என்றும் மின் பகிர்மானக் கழகம் கூறியுள்ளது. தமிழகத்தின் சூழலை புரிந்து மின் பகிர்மான கழகம் வெளியிட்ட தகவல் பலரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Previous articleThe mechanics of casinogames at Box 24 Casino Mobile
Next article10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று! கர்நாடகாவில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3!