கொரோனோ நோயாளிகளுக்கு புதிய‌ ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியது தமிழ்நாடு அரசு இரவு பகல் பாரமல் உழைத்த தொழில்நுட்பக் குழு

Photo of author

By Parthipan K

கொரோனோ நோயாளிகளுக்கு புதிய‌ ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியது தமிழ்நாடு அரசு இரவு பகல் பாரமல் உழைத்த தொழில்நுட்பக் குழு

உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள உள்ள பெயர் கொரோனோ என்று அழைக்கப்படும் கோவிட்-19 வைரஸ். கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக்க கொண்டு உள்ள போது அவர்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தையோ அரசு மருத்துவ மனையையோ தொடர்பு கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசு புதிய செயலியை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை.சத்யன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் இடம்பெற்றிருந்தனர். இது குறித்து கோவை.சத்யன் அவர்கள் கூறியதாவது :

இந்தியாவில் முதல் முறையாக கொரோனோ தொற்று இல்லாமல் வீட்டில் 14 நாட்கள் இருப்பவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து மருத்துவரை காணும் ஆன்ட்ராய்டு செயலி இப்பொழுது தயார் நிலையில் உள்ளது. இதை வடிவமைக்க, செயல்பாட்டிற்கு கொண்டு வர 8 நாட்கள் உணவு உறக்கம் இல்லாமல் உழைத்தோம்.

கொரோனோ தொற்று வளர துவங்கியவுடன் வீட்டில் தனிமைப்படுத்தபட்டவர்கள் வெளியை வந்தால் மற்றவர்களுக்கு ஆபத்து. அவர்களை நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு பாதிப்பு அதிகம்.அமெரிக்காவின் FDA வீட்டில் இருப்பவர்களை வீட்டில் இருந்தபடியே முறையாக கண்காணிக்கும் அழைப்பு விடுத்தது இருந்தது.

நேற்று ஐம்மு கஷ்மீர் மாநிலத்தில் வாட்சப் வீடியோகால் பயன்படுத்தி உள்ளனர். அதன் நடைமுறை சிக்கல் ஏராளமாக உள்ளது அதில் தகவல்களை அலசுவது கடினம். இதனை கருத்தில் கொண்டு கடந்த 8 நாட்களாக இரவு பகல் பாராமல் IT கட்டமைப்பை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறோம்.

இந்த வாய்ப்பினை நல்கிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும், மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.