தமிழக பட்ஜெட் தாக்கல்: பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு..!!

Photo of author

By Jayachandiran

தமிழக பட்ஜெட் தாக்கல்: பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு..!!

வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்கிறார்.

துறை ரீதியான நிதி ஒதுக்கீடுகள்:

*  தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* வேளாண்மைத் துறைக்கு 15,894 கோடி ஒதுக்கீடு.
*  தொல்லியல்துறைக்கு 32.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
*  மருத்துவத்துறைக்கு 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* கீழடி அகழ்வாராய்ச்சியில் வரலாற்று சான்றுகளை வெளிப்படுத்தும் பொருட்களைக் காட்சிப்படுத்த அகழ் வைப்பகம் கட்ட 12.21 கோடி ஒதுக்கீடு.
*  தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் 64,208.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ஓய்வூதியத்திற்கு 33,009.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
*  விசைப்படகுகளில் நவீன தகவல் தொடர்பு டிரான்ஸ்ஃபான்டர் பொருத்த 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக 75.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* நகராட்சி நிர்வாக மேம்பாட்டிற்கு 18,540 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* கால்நடை துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* பொது விநியோக திட்டத்தை மேம்படுத்த 400 கோடி மானியம், உணவு மானியத்திற்கு 6500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு.

தேசிய வளர்ச்சி விகிதத்தை விட தமிழக மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் தமிழகத்துக்கான நிதி 4.023% இலிருந்து 4.189 % ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வருவாயை உயா்த்தவும், கடன் அளவினை குறைத்து கட்டுக்குள் வைக்க திட்டம் வகுக்கப்படும் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் 15 வது சட்டப் பேரவையின் முழுமையான பட்ஜெட் தாக்கலாக இது இருக்கிறது. மேலும் தமிழக வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு சிறப்பம்சம்களை கொண்ட பட்ஜெட் வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.