சத்துணவு பணியாளர் தேர்வு நிறுத்திவைப்பு! என்ன காரணம்..?

0
184

அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்முகத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு சத்துணவுப் பணியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.

இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்பட்டுள்ளதால், நேர்காணல் தேர்வுப் பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றுப் பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்த ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் தொழிலில் கவனம் தேவை ! இன்றைய ராசி பலன் 09-10-2020 Today Rasi Palan 09-10-2020
Next articleமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்!