வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

0
133

வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் அவர் தலைமையிலான அரசு மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், அதனை தொடர்ந்து மக்களுக்கு வேண்டிய அனைத்து விதமான நலத்திட்டங்களையும் செய்து வருகிறார்.

முதல்வர் கொரோனா வைரஸ் தொற்றின் காலத்திலும் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை உருவாக்குவது மட்டுமில்லாமல் மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளார். இந்த நிலையில் இளைஞர்கள் வேலை தேடி சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவை தென்மாவட்டங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார். மேலும் அதனை தொடர்ந்து தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதால், அங்கு முதலில் அமைக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அமைப்பதே எங்களது நோக்கம் என்றும் அறிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து இனி வேலை இல்லாத இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும், தொழில்நுட்பப் பூங்காவை தென்மாவட்டங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளக தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தெரிவித்து இருப்பது, விரைவில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஅதிகாரத்தின் குரலாக திமுக இருக்கிறது! தமிழக மக்கள்!
Next articleசிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்! நீட்டிக்கப்பட்டது கால அவகாசம்!