தமிழக அரசு புதிய விதிமுறை.. இனி பள்ளிகளில் இது கட்டாயம்!! தலைமை ஆசிரியருக்கு பறந்த அதிரடி உத்தரவு!
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பது, முறையான கல்வி, மற்றும் அனைவருக்கும்
கல்வி என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் அரசு சார்பில் இடைநிற்றலை தவிர்ப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் வெளி மாவட்டங்களில் வேலைக்கு செல்லும் பெற்றோரால் பாதியில் படிப்பு முடக்கப்படும் ஏழை மாணவர்களின் பிரச்சனைக்கு இன்னும் முறையான தீர்வு கிடைத்தப் பாடில்லை.ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய்களை இந்த மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கும் எஸ்.எஸ்.ஏ அதிகாரிகள் இந்த குழந்தைகளின் மவுன அழுகைக்கு என்ன பதிலை தர போகின்றனர்? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளன.
பெற்றோரின் அலட்சியத்தாலும் பல்வேறு குடும்ப சூழ்நிலைகளாலும் குழந்தைகளுக்கு
அடிப்படை கல்வி கிடைப்பதற்கு முன்பே அவர்களின் பள்ளி வாழ்க்கை முடிவு பெற்று
விடுகிறது.இதனால் பெற்றோர்களால் அடிப்படை கல்வி பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்காக உண்டு, உறைவிட பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.இவை ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.அதில் குழந்தைகளை சேர்ப்பது குறித்து இந்த துறையே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இடைநிற்றலை தவிர்க்க அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பிலும் மையங்கள் உள்ளன. பெற்றோர் பணிக்கு செல்லும் போது குழந்தைகளை இம்மையங்களில் சேர்க்க முன்வர வேண்டும்.
இதற்காக இடைநிற்றல் குழந்தைகளின் விவரங்களை சேகரித்து பள்ளிக் கல்வித்துறைக்கான எமிஸ் இணைய தளத்தில் பதிவு செய்ய ஒவ்வொரு தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவு இடப்பட்டுள்ளது.
வயது பூர்த்தியாகியும் பள்ளிக்கு வராதவர், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி படிப்பை தொடராமல் இடைநின்ற மாணவர்கள் குறித்த விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்பு வரை இடை நின்ற மாணவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து தமிழகம் முழுவதிலும் பள்ளிகளில் 100% உறுதி செய்யும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் இடைநின்ற மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப் பட்டு மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் பணி நடைபெறுகிறது.
அந்த வகையில் தொடர்ந்து 30 நாட்கள் பள்ளிக்கு வராத குழந்தைகள், பள்ளிக்கு பாதியில் வராத குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி இன்று 19-12-2022 முதல் தொடங்குகிறது.
இதற்காக தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர்கள், தன்னார்வலர் கொண்ட குழு அமைக்கப்பட்டு வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தி பெற்றோர்களிடம் பேசி குழந்தைகளை சிறப்பு வகுப்பில் அல்லது பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.