நமது மருத்துவ செலவை முழுமையாக ஏற்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! இந்த தகுதி இருந்தாலே போதும்!!

Photo of author

By Divya

நமது மருத்துவ செலவை முழுமையாக ஏற்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம்!! இந்த தகுதி இருந்தாலே போதும்!!

நவீன உலகில் பெயர் தெரியாத பல வகை நோய் தொற்றுகள் உருவாகி உயிர் பயத்தை காட்டி வருகிறது.சாமானியர்கள் உழைக்கும் பணத்தில் 50% மருத்துவ செலவிற்கே சென்று விடுகிறது.குழந்தைகள்,முதியவர்கள் இருக்கும் வீட்டில் மருத்துவ செலவு அடிக்கடி ஏற்படும்.அதேபோல் சில எதிர்பாராத உடல் நலக் கோளாறு,விபத்து ஏற்படும் பொழுது கையில் லட்சக்கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே மருத்துவ சிகிச்சை பெற முடியும் என்ற நிலை உருவாகி விட்டது.

அப்படி இருக்கையில் தங்களின் மருத்துவ சிகிச்சையை கட்டணமில்லாமல் பார்த்துக் கொள்ள தமிழக அரசு ஒரு அசத்தல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பார்த்துக் கொள்ள முடியும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.மருத்துவ காப்பீட்டு அட்டை பெறும் நபரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் மூலம் கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள முடியும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்கான தகுதி:

1)இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
2)குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:

1)வருமானச் சான்றிதழ்
2)ரேசன் அட்டை
3)ஆதார் அட்டை

எவ்வாறு விண்ணப்பிப்பது?

தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தங்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கப்படும்.