தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா இதற்கு இலவசம்! உடனே முன்பதிவு செய்யுங்கள்!!
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வதற்கு ஆன்மீகப் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியது. இந்த ஆன்மீக பயணத்தில் அம்மன் திருக்கோவில்கள் மற்றும் வைணவ திருக்கோவில்களையும் மக்கள் கண்டு களிக்கலாம் எனக் கூறியிருந்தனர். சிறப்பு மாதத்தில் பிரசித்தி பெற்ற நாட்களில் இந்த சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். அந்தவகையில் ஆடி மாதம் இதுபோல ஆன்மீக சுற்றுலா பயணம் நடைபெற்றது.அந்த வகையில் இது புரட்டாசி மாதம் என்பதால் இன்று சென்னையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருமால் தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.
அதனை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இணைந்து தொடக்கி வைத்தனர். இதில் இரண்டு திட்டங்களாக பிரித்து மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமல்படுத்தியுள்ளனர். இந்த இரண்டு திட்டத்தின் வழியாக செல்லும் பக்தர்கள் கோவில்களில் கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்யலாம் என தெரிவித்துள்ளனர். அதேபோல அரசின் ஆன்மீக சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு திருக்கோவில்களில் வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அவர்கள் செல்லும் திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் குறித்து ஒரு கையேடு வழங்கப்படும். மதிய உணவையும் இவர்களே வழங்கி விடுகின்றனர்.குறைந்த கட்டணத்தில் மக்கள் பயன்படும் வகையில் இந்த ஆன்மீக சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது.