தமிழகமே அலர்ட்.. டிசம்பர் 1 இல் உருவாகிறது புதிய புயல்..!! இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!
கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையோடு மிதிலி புயல் ஒரு ஆட்டம் காட்டிய நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு புயல் உருவாக சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அந்தமான் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது தற்பொழுது ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியின் வரமேற்காக நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இவை வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி அன்று இவை புயலாக வலுக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதன் காரணமாக டிசம்பர் 3 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
தலைநகர் சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புயல் முன்னெச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.