தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்! பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

0
113

தேசிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்ற தமிழகம்!பெருமிதம் கொள்ளும் முதல்வர்!

ஏற்றுமதிக்கான அம்சங்களில் சிறந்த மாநிலங்கள் பட்டியலில் இந்தியாவிலேயே மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது தமிழகம்.

இந்தப் பட்டியலானது அரசின் கொள்கை, வர்த்தகம் செய்யும் நிலவரம், ஏற்றுமதி செய்யப்படும் சூழல், ஏற்றுமதி நிலை உள்ளிட்ட நான்கு அம்சங்களைக் கொண்டு இந்த பட்டியல் ஆனது தயார் செய்யப்பட்டது.

இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை தமிழகம் பெற்றுள்ளது என்பது பெருமை கொள்ள வேண்டிய விஷயமே.

முதலிடத்தில் குஜராத் மாநிலமும், இரண்டாம் இடத்தில் மஹாராஷ்டிரா மாநிலமும், மூன்றாம் இடத்தை தமிழகமும் பெற்றுள்ளது.

இந்திய அளவில் ஆட்டோமொபைல் தயாரிப்பு ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 46 சதவீதமும், ஆடைகள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 19 சதவீதமும், மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 19 சதவீதமாகவும் உள்ளதாக என தமிழக அரசு கூறியுள்ளது.

ஏற்றுமதிக்கான சிறப்பம்சங்கள்

1.மிகச் சிறந்த நிர்வாகத் திறன்

2. திறன்மிக்க மனித வளம்

3. அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள்.

4. மிகச் சிறந்த ஆற்றல் மூலம்.

5. நான்கு பெரிய மற்றும் 22 துறைமுகங்கள்.

6. சர்வதேச மற்றும் 2 உள்நாட்டு விமான நிலையங்கள். இதன் அடிப்படையிலேயே தமிழக மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வளர்ச்சி பாதையை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து பெருமை கொண்டுள்ளார்.

Previous articleஇந்த நாட்டில் இந்த ஆண்டு இறுதிவரை வருவதற்கு தடை
Next articleமீண்டும் அதிபராக இவருக்கே வாய்ப்பு அதிகம்