தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு! 67 ஆயிரம் பேர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தேர்வாணையம்!

Photo of author

By Rupa

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு! 67 ஆயிரம் பேர் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட தேர்வாணையம்!

இன்று இரண்டாம் நிலை போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது தமிழ்நாடு சீருடை பணியாளர் சார்பில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 295 தேர்வு மையங்கள், தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டது. இந்த இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கு 3552 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் விண்ணப்பத்தவர்களின் எண்ணிக்கையும் மூன்று புள்ளி 66 லட்சம் ஆக இருந்தது.

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பணிபுரிவர். 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் கிட்டத்தட்ட 67 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, சேலம், மதுரை, கோவை என 35 மாவட்டங்களில் இத்தேர்வு இன்று நடைபெற்றது.

இந்தத் தேர்வை இன்று மூன்று லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த தேர்வு எழுத வருபவர்களை, அங்கிருந்த போலீசார் முற்றிலும் கண்காணித்த பிறகு தான் தேர்வு அறைக்குள் அனுப்பினர். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுவர். இதில் 70 மதிப்பெண்கள் பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும். அடுத்த 80 மதிப்பெண்கள் தமிழ் குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

இரு கேள்விகளும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளனர். இதனால் தேர்வாளர்களால் எளிதில் தேர்வெழுத முடிந்தது. குறிப்பாக இரண்டு டிகிரி முடித்தவர்கள் இந்த தேர்வை  எழுதினால் அவர்களுக்கு கட் ஆப் மதிப்பெண் அதிகமாக வழங்கப்படும். அவ்வாறு எழுதுபவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கியது. பின்பு மதியம் 12.40 மணிக்கு முடிந்தது.