ஆளுநரையே மிரட்டிய தமிமுன் அன்சாரி! ஆடிப்போன ஆளுநர் மாளிகை!

Photo of author

By Sakthi

பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கின்றார்.

இன்று வேதாரண்யத்தில் அந்த கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒருவருடைய இல்ல நிகழ்வில் பங்கேற்ற பின் தமிழ் மூலம் சாரி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த சமயம் அவர் தெரிவித்திருப்பதாவது பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை சம்பந்தமாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் மவுனம் சாதித்து வருகிறார்.

பன்னோக்கு விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையை எதிர்பார்த்து காத்திருப்பதாக, காரணம் தெரிவிக்கப்பட்டது. நேற்று உச்ச நீதிமன்றம் இது குறித்து தெரிவிக்கையில், அந்த அறிக்கை தேவையற்றது எனவும், ஏன் இன்னும் இவர்களுடைய விடுதலை சம்பந்தமாக ஆளுநர் முடிவெடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறது.

ஆகவே உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தின் அடிப்படையிலேயே பேரறிவாளன் உள்பட அந்த ஏழு பேரையும் ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் அவர்கள் அரசின் சார்பாக அமைச்சர்களை ஆளுநரிடம் அனுப்பிவைத்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே 29 வருடங்கள் அவர்கள் இந்த தண்டனையை அனுபவித்து வந்திருக்கிறார்கள் இந்த நிலையில் திருமதி சோனியா காந்தி, அவர்களும் ராகுல் காந்தி அவர்களும், அந்த ஏழு பேரையும் மன்னித்ததுடன் அவர்களைப் பழி வாங்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றும் தெரிவித்தனர்.

ஆகவே, ஆளுநர் அந்த ஏழு பேரின் விடுதலையில் இதற்குப் பிறகும் தாமதிக்கக்கூடாது ஆளுநர் இதனை அலட்சியம் செய்தால், ஆளுநரே வெளியேறு என்ற ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டி முன்னெடுக்க வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறோம்.

அதேபோல, ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை வருடத்தை நிர்ணயம் செய்து, அவர்களுடைய விடுதலையும் உறுதி செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கின்றோம் என்று அவர் பேட்டி அளித்திருக்கிறார்.