தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை-வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

Photo of author

By Vijay

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வரும் 14 (வியாழக்கிழமை) மற்றும் 15ம் (வெள்ளிக்கிழமை) தேதிகளில் நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரித்துள்ள அறிவிக்கையில்,

வரும் புதன்கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மற்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தமான் மற்றும் வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.