தங்கலான் திரைப்படத்தின் டீசர் அப்டேட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
48
#image_title

தங்கலான் திரைப்படத்தின் டீசர் அப்டேட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு தற்பொழுது புதிய பாஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் தங்கலான் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தங்கலான் திரைப்படத்தில் நடிகர்கள் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி திரிவோது, முத்துக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தங்கலான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தங்கலான் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா அவர்களும், நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் பா ரஞ்சித் அவர்களும் இணைந்து தயாரிக்கின்றனர். தங்களின் திரைப்படம் 2024வது வருடம் ஜனவரி 26ம் தேதி வெளியாகவுள்ளது.

தங்கலான் திரைப்படத்திற்காக நடிகர் சியான் விக்ரம் அவர்கள் புதிய கெட்டப்பில் நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் இது கோலார் தங்கச் சுரங்கத்தின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ளதால் இதன் மீது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் படக்குழு இன்று(அக்டோபர் 31) தங்கலான் டீசர் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது தங்கலான் திரைப்படத்தின் டீசர் நாளை அதாவது நவம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. அதன்படி தற்பொழுது வெளியான அப்டேட்டில் தங்கலான் டீசர் வெளியாகும் நேரத்தை கூறியுள்ளது. அதன்படி தங்கலான் திரைப்படத்தின் டீசர் நாளை(நவம்பர்1) இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.