தஞ்சை கோயில் சுற்றுச்சுவரில் தமிழர்களின் பாரம்பரிய ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தல்..!!
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்கும் விதமாக கோயிலின் சுற்றுச் சுவரில் பாரம்பரியமான வண்ண வண்ண ஓவியங்களை அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் வரைந்து அசத்தியுள்ளனர். அரசுக்கு சொந்தமான சுவர்களிலும் மாணவர்களின் கைவண்ணம் ஓவியங்களாக ஜொலிக்கிறது.
தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு வருகிற நாளை சிறப்பாக நடைபெற உள்ளதால் கோயில் அலங்கரிப்பு, தமிழ் வேதங்கள் ஓதப்பட்டு வருகின்றன. தஞ்சை கோயிலின் குடமுழுக்கு நீண்ட காலமாக சமஸ்கிருத்மொழியில் நடத்தப்பட்டு வந்தது. தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கை தமிழில்தான் நடத்த வேண்டும் என்று தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மற்றும் பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டிலும் நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, குடமுழுக்கு சம்பந்தமான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தி ஆரவாரமான தொடக்கத்துடன் கொண்டாடப் பட்டு வருகிறது. தமிழ் மாமன்னர் ராஜ ராஜ சோழனின் கம்பீரமான தோற்றங்களும், தமிழினத்தின் பாரம்பரிய விளையாட்டுகளும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையும் மிக தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது. ஓவியங்கள் இரவு பகலாக ஆர்வத்துடன் வரைந்து வருகின்றனர். இந்த வண்ண ஓவியங்களால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஓவியங்களை யாரும் அழித்துவிடாமல் இருக்கவும், சேதப்படுத்தாமலும், விளம்பர சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என்றும் மாநகராட்சி இவற்றை பாதுகாக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓவியங்கள் ஒருமாதமாக வரையப்பட்டது குறிப்பிடத்தக்கது.