டாப்செடோ சிறுகடன் திட்டம்!! பெண்கள் இனி முதலாளிகளாக மாற மத்திய அரசின் புதிய திட்டம்!!

Photo of author

By Gayathri

தமிழக அரசின் டாப்செட்கோ அமைப்பு பிற்படுத்தப்பட்டோருக்கான திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் அதிகபட்சமாக 15 லட்ச ரூபாயை மகளிருக்கு கடனாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் டாப்செடோ சிறுகடன் திட்டத்தினை மகளிர் சம்ரிதி யோஜனா திட்டம் என்றும் கூறலாம்.

மகளிர் சம்ரிதி யோஜனா திட்டம் :-

✓ மகளிர் சுய உதவி குழுக்கள் போன்று இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது.

✓ ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

✓ சுய உதவிக் குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருத்தல் வேண்டும்.

✓ திட்ட அலுவலர் மூலம் மகளிர் திட்டம் சோதனை செய்யப்பட்டு தரப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

✓ அதிகபட்ச கடன் தொகை ஒரு நபருக்கு ரூ. 1,00,000
அதிகபட்ச கடன் தொகை ஒரு குழுவிற்கு ரூ. 15,00,000

மேலும் இந்த கடன் தொகை காண ஆண்டு வட்டி விகிதம் 4% எனவும், இக்கடனை திருப்பி செலுத்துவதற்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே காலக்கெடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :-

✓ மத்திய அல்லது மாநில பட்டியலில் உள்ளபடி பயனாளி பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர் மரபினராக இருத்தல் அவசியம்.

✓ குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

✓ பயனடைவோரின் வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும் குறிப்பாக ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை ;-

✓ சென்னையில் உள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம்.

✓ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் மண்டல மேலாளர்.

✓ கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகங்கள்.

✓ கூட்டுறவு கடன் சங்கங்கள் / வங்கிகள்.

மேற்கண்ட அலுவலகங்களில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இலவசமாக கிடைக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடனுதவி பெற நினைப்பவர்கள் இந்த விண்ணப்பங்களை பெற்று அவற்றை பூர்த்தி செய்து அவற்றுடன் சில நகல்களை இணைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலர் / மண்டல மேலாளர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் / கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க பட வேண்டும்.

விண்ணப்பங்களுடன் சேர்க்கப்பட வேண்டிய நகல்கள் :-

✓ சாதி, வருமான மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்.

✓ முன்னணியில் உள்ள நிறுவனமொன்றிலிருந்து திட்டத்திற்கான மதிப்பீடு.

✓ திட்ட அறிக்கை.

✓ குடும்ப அட்டை

✓ ஓட்டுநர் உரிமம் ( போக்குவரத்து வாகனங்கள் வாங்குவதற்காக கடன் கோரப்பட்டால் மட்டும் )

✓ நிதி உதவி பெறுவதற்கான ஆவணங்கள் / வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள்.

✓ ஆதார் அட்டை.

இதில் குறிப்பிட்டது போல கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பங்களை பெற்று அதனுடன் நகல்களை இணைத்து மேற்குறிப்பிட்டபடி முறையாக செலுத்தினால் அரசு ஒரு லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான கடனை மகளிருக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.