மரவள்ளி கிழங்கு பக்கோடா! குழந்தைகளுக்கு அருமையான ஸ்னாக்ஸ்!

0
139

மரவள்ளி கிழங்கு பக்கோடா! குழந்தைகளுக்கு அருமையான ஸ்னாக்ஸ்!

தேவையான பொருட்கள் :கடலை மாவுஅரை கப், பச்சரிசி மாவு கால் கப், நெய் கால் டேபிள் ஸ்பூன், மரவள்ளி கிழங்கு அரை கிலோ, நறுக்கி பெரிய வெங்காயம் இரண்டு , பச்சை மிளகாய் இரண்டு , மிளகாய் பொடி அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு , சோடா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழைஒரு கைப்பிடி அளவு

அரைக்க :இரண்டு லவங்கம் ,கால் டீஸ்பூன்சோம்பு ,ஒரு டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது

செய்முறை :முதலில்   மரவள்ளிக் கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பொருளுடன் துருவிய கிழங்கைச் சேர்க்க வேண்டும். பின்பு கடலை மாவு, பச்சரிசி மாவு, நெய், மரவள்ளி கிழங்கு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சோடா, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகிய அனைத்தையும் போட்டு நன்கு கலந்த பிறகு லேசாக தண்ணீர் விட்டு பக்கோடா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அதனையடுத்து  எண்ணெய் காயவைத்து, பிசைந்து வைத்த பக்கோடா மாவை சிறிய சிறிய உருண்டையாக பிடித்து எண்ணெயில் போட்டு பொன்னிறமானவுடன் எடுக்க வேண்டும்

Previous articleபசியாற்றும் வைக்கத்தப்பன் திருக்கோவில்!
Next articleஇஞ்சியில் இத்தனை மருத்துவ பயன்களா? உடனடியாக நீங்களும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!