மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

0
152

பிக்பாஸ் பிரபலமான பிரபலமான ரைசா தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து பல படங்களை நடித்து வருகிறார். ரைசா தற்போது அடுத்த படத்தில் புது தோற்றத்துடன் எமோசனலான திரில்லர் மூவி ஒன்றில் களமிறங்கியுள்ளார்.

‘தி சேஸ்’ என்று அந்தப் படத்திற்கு  டைட்டில் வைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில்  ரைசா வில்சன் மற்றும் ஹரீஷ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கைதி படத்தில் குழந்தை நட்சத்திரமாக  மோனிகாவும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்தின் இயக்குனரான கார்த்திக் ராஜு  தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்திற்காக டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த பஸ்ட் லூக் போஸ்டர் ஆனது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மேலும் படக்குழுவினருக்கு  சினிமாபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் கூடிய விரைவில் இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Previous articleகொரோனா பரவல்: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1045 பேர் பலி!
Next articleகுலாம் நபி ஆசாத் கபில் சிபல் பாஜகவில் இணைகிறார்கள்? அழைப்பு விடுத்த ராம்தாஸ் அத்வாலே