புதிய முறையில் தார் சாலை அமைக்கும் பணி!! இனி பள்ளங்களுக்கு இடமே இல்லை!!

Photo of author

By CineDesk

புதிய முறையில் தார் சாலை அமைக்கும் பணி!! இனி பள்ளங்களுக்கு இடமே இல்லை!!

CineDesk

Tar road construction in a new way!! No more room for pits!!

புதிய முறையில் தார் சாலை அமைக்கும் பணி!! இனி பள்ளங்களுக்கு இடமே இல்லை!!

சாலைகளில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகளை செய்யும் போது சாலைகளை சமமாக மாற்ற ஜல்லியை கொட்டி சாலையை போடுவார்கள்.

ஆனால் அது சில நாட்களிலேயே பள்ளமாக மாறி விடுகிறது. அந்த வகையில், மதுரையில் இது போன்ற பணிகளால் சாலைகளில் பள்ளம் ஏற்பட்டுள்ளதை புதிய ஒரு முறையைக் கையாண்டு சரி செய்து இருக்கிறார்கள்.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 28  வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகளும், 100  வார்டுகளில் குடிநீர் திட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடையும் சாலைகளில் ரூபாய் 480  கோடி செலவில் புதிய சாலைகள் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.

முன்பெல்லாம் இது போன்ற பணிகள் முடிவடைந்த பிறகு ஜால்லி கற்களை கொட்டி சாலையை அமைப்பார்கள். ஆனால் அது பள்ளமாகிவிடும். குழி தோண்டி சாலையை அமைக்காமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றது.

இதை சரி செய்வதற்காக சமன் படுத்திய சாலைகளை அறுபது சென்டி மீட்டர் முதல் எண்பது சென்டி மீட்டர் அகலம் கொண்டு குழு தோண்டி, அதில் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு,

அது சில நாட்கள் நன்கு காயும் வரை அப்படியே விட்டுவிட்டு அதன் பிறகு அதில் ஜல்லி கற்களை போட்டு தார் கலவையை கொட்டி சாலையை அமைத்து வருகிறார்கள்.

இந்த முறையின் படி சாலைகளை அமைத்து வருவதால் எதிர்காலத்தில் எந்த ஒரு பள்ளமோ சாலைகளில் ஏற்படாது. எனவே, சாலைகள் கீழே இறங்காமல், பள்ளமாகாமல், தரமாக இருக்கின்றனர்.

எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது இந்த முறையின் படி தார் சாலைகளை அமைத்து வருகிறார்கள். இது மக்களிடையே நல்ல வரவேற்பும் பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் உள்ள மடிப்பாக்கம் பகுதியிலும் இது போன்று தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது எனவே, அந்த சாலைகளில் இனி மழை நீர் தேங்கும் அவசியமே இருக்காது.