புதுவை: அரசுத்துறையில் அதிக வருமானம் ஈட்டி தரும் முக்கிய பங்கு வகிப்பது மதுபானக்கடை (டாஸ்மாக்). அதன் அடிப்படியாக கொண்டு இயங்கும் மாநிலங்கள் அதிகம். அது தற்போது வளர்ச்சியடைந்து இணைய வழியாக பணம் அனுப்பும் முறை வந்துள்ளது. மேலும் தற்போது வருகிற புத்தாண்டு முன்னிட்டு இந்தியாவின் முக்கியமாக சுற்றுலா தளங்களான கோவா உள்பட பல்வேறு மாநிலங்களில் அரசு அனுமதி பெற்று இரவு நேரங்களில் மதுக்கடைகளை திறப்பது வழக்கம். அது தொடர்பாக தற்போது முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
- அதாவது புதுச்சேரியில், புத்தாண்டு தினத்தன்று இரவு 1 மணி வரை மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
- அதன்படி இரவு 11 மணி முதல் 1மணி வரை மதுபானங்களை விற்க விரும்பினால், அவர்கள் அரசாங்கத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
- புதுவையில் வழக்கமான நடக்கும் மதுக்கடைகளுக்கு, 5,000 ரூபாய் கட்டணமும், பார் வசதி இருந்தால் 10,000 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.
- புதுவை அரசு கூடுதல் மணிநேரம் மதுக்கடைகளை திறக்க அனுமதி கொடுத்துள்ளதால் மதுக்கடை உரிமையாளர்கள் மற்றும் மதுபிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.